பல்கலைக்கழக மாணவனை மிரட்டிய குற்றச்சாட்டில் ரம்புக்வெலவின் மகன் கைது!

Sunday, March 11th, 2018

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இலங்கைக் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஒரு இலட்சத்து 91 ஆயிரம் அமெரிக்க டொலர் பொறுமதியான கொரோனா மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அம...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் - பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய...