பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் கடந்த மார்ச் 13ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பல்கலைக்கழகங்களின் கற்கை நடவடிக்கைகள் வரும் 11ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் - சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !
அரசியல் சவால்களை வெற்றிகொள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது - ஜனாதிபதி கோ...
கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவு - விஷேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் என தேசிய ட...
|
|