பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் –  அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, October 30th, 2016

நாட்டில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்றை  பருத்தித்துறைக்கு அருகாமையில் நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வடபகுதி மீனவர்களுக்கு இலவசமாக 150 வள்ளங்களை வழங்கவுள்ளதுடன் 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில் கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழில் சமூகத்தினருக்கும் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ளன. கடற்றொழில் சமூகத்தினருக்கு இவ்வாறான நிவாரணம் 20 வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

9a7b2350f5a014c58d0b933cb0a33b78_XL

Related posts: