பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவில் வழங்குமாறு அறிவிப்பு!

Thursday, November 29th, 2018

பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஜி.சி.ஈ. சாதாரணதர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை விரைவில் மாணவர்களுக்கு விநியோகிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகளை இதுவரை மாணவர்களுக்கு விநியோகிக்காத பாடசாலை அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டைகள் தொடர்பில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் தீர்வு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 3 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை 4 ஆயிரத்து 661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

Related posts: