பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Friday, May 28th, 2021

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் இந்த தற்காலிக இடைநிறுத்தம் மின் விநியோகத்தை பாதிக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை மின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் –

எரிபொருளால் இயக்கப்படும் ஒரு மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தற்காலிக தடை ஏற்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து நிலவும் மழை காரணமாக  மின் உற்பத்தி நிலையங்கள் தேவையானளவு மின்சாரத்தை வழங்கும்.

இதற்கிடையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஒரு இலட்சத்து 77 ஆயிரம் பேருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 9 ஆயிரத்து 800 பேருக்கான இணைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: