பயணத் தடையின் தாக்கம் குறித்து ஆராயப்படுகின்றது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் – இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதைக் குறைக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் வார இறுதியில் இந்த முறை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி பயணக் கட்டுப்பாடு இதுவரை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மக்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், பயணத் தடையின்போது அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டிருந்தமை காரணமாக இது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|