பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அமரர் அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, April 24th, 2019

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய தரிசனத்தின் போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பலியான பருத்தித்துறையைச் சேர்ந்த அமரர் சவரிமுத்து அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியது.

பருத்தித்துறை, முனை, வெளிச்சவீட்டு ஒழுங்கையைச் சேர்ந்த அன்னாரது இல்லத்தில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த புதவுடலுக்கு இறுதி அஞ்சலிமரியாதை செலுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் யாவும் நிச்சயம் வரலாற்றில் பதிவ...
அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ...
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் - பிரதிப் பணிப்பாளர் யமுன...