பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்ததைப் போல்ன்று தற்போதும் கைகோர்க்க வேண்டும் – அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க!

Saturday, January 30th, 2021

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைந்தது போல் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொவிட் – 19 வைரஸை ஒழிக்கவும் நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட்19 தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாமனைவரும் மகிழ்வடையக் கூடியதொரு சந்தர்ப்பமே இதுவாகும். கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மோதும் ஆரம்ப சந்தர்ப்பமாக இன்று தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆரம்பமாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்திருந்தோம். அதனால் போரை எம்மால் வெற்றிக்கொள்ள முடிந்தது. ஆகவே, இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியை ஒழிக்கும் போரிலும் மிகவும் விரைவில் நாம் வெற்றிக்கொள்வோம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்த போரை வெற்றிக்கொள்ள முடியுமென நம்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: