பதவி விலகுவது குறித்து பிரதமரின் அறிவிப்பு!

Friday, February 16th, 2018

தற்போதைய அரசாங்கம் எவ்வித மாற்றங்களும் இன்றி முன்னோக்கி கொண்டுச் செல்லப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அத்துடன் கட்சியில் புதிய மாற்றமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடைபெற்றுமடிந்த  உள்ளூராட்சி தேர்தலில் பொதுமக்களிடம் இருந்து கிடைந்த எச்சரிக்கையை தாம் ஏற்பதாகவும்  பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை பிரச்சினைகள் எதுவும் இன்றி முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவி விலக வேண்டிய சந்தர்ப்பம் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி , அரசியலமைப்பிற்கு அமைய தான் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமக்கு தற்போதைய நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மை இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: