பதவி உயர்வில் மாற்றம் இல்லை – ஆளுநர் றெஜினோல்ட் குரே!

Thursday, March 15th, 2018

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் 29-09-2017 ஆம் திகதிய அனுமதிக்கு இணங்க வட மாகாண உள்ளளூராட்சி உதவியாளர்களுக்கு வகுப்பு 1 க்கான பதவி உயர்வு மாற்றமின்றி வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாண உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு  ரெிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரது NP/07/LG/APL/GR.INC  இலக்க 29-09-2017 திகதி அனுமதிக்கு இணங்க 16-05-1999 ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருக்கும் வண்ணம் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதிக்கப்பட்ட உள்ளுராட்சி உதவியாளர் பதவிக்குரிய சேவை பிரமாண குறிப்பின் அடிப்படையில் 16-05-2004 வகுப்பு 2 ற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல எந்தவித மாற்றமுமின்றி 29-09-2017 இல் அனுமதிக்கப்பட்ட சேவை பிரமாணக் குறிப்புக்கு இணங்க ரிஏ. 3-8-2 சம்பள தொகுதியில் வகுப்பு 1 க்கான பதவி உயர்வு 2014-05-16 ஆம் திகதி முதல் வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட ஆளணி விவரம் மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பு என்பனவும் வடக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு உள்ளுராட்சி ஆணையாளர் ஊடாக அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

Related posts: