பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் – மஹிந்தவிடம் ரணில் வேண்டுகோள்!

Wednesday, July 10th, 2019

எதிர்வரும் காலங்களில் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டட வாளாகத்தில் மஹிந்த தேசப்பிரியவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இந்த இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையானது அரசியலமைப்பு மீறலாகும். தொடர்ந்தும் தேர்தலை காலதாமதப்படுத்துவதானது, அதிகாரபரவலாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு, மாகாண சபை முறைமையினை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையையும் மேலெழச்செய்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படாத பட்சத்தில் அதற்கான பொறுப்பினை ஏற்று ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவவதாக மஹிந்த தேசப் பிரிய அண்மையில் அறிவித்திருந்தார். இந் நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வேண்டுகோளை அவரிடம் விடுத்துள்ளார்.

Related posts: