பங்குனி 15 இல்வரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா !

வரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் பெருமளவானோர் கலந்து வரும் நிலையில், பெருவிழாவிற்கான ஏற்பாட்டுக் கலந்துரையாடல் இன்று(22) மதியம் 2 மணியளவில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பெருவிழா நடைபெறவுள்ளமையினால், இந்திய இலங்கை பக்தர்கள் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யும் பொருட்டு இந்த ஆரம்ப கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில், கச்சதீவு ஆலய பங்குத்தந்தை உட்பட நெடுந்தீவு பிரதேச செயலாளர், கச்சதீவு போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள், முப்படையினர், பொலிஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|