நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது – எரிபொருள் – எரிவாயுவுக்கு அவசியமான டொலரை வழங்கவும் நடவடிடிக்கை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.

வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விநியோகம் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலுக்கு கட்டணம் செலுத்த முடியாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

7 நாட்களாக குறித்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. அத்துடன் இன்றைய தினமும் 150 நிமிடங்கள் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இதனிடையே

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியா அதிகம் உதவியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையில் இந்தியாவுடன் அதிகளவில் கலந்துரையாடுவது குறித்து அவதானம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: