நெடுந்தீவுக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
Sunday, December 6th, 2020கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டமையால் தடைப்பட்டிருந்த நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்கள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் காலை 07.30 மணிக்கு கரிகணன் தனியார் படகு நெடுந்தீவில் இருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது. அத்துடன் குறித்த படகு மாலை 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீழுவு சோக்கி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சேவையிலீடுபட்ட படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது இந்த வகையில் புரவி புயலின் பின்னர் குறிப்பிட்ட படகே மக்கள் சேவையில் இணைந்து வருகின்றது கடந்த வெள்ளிக்கிழமையும் இப்படகின் ஊடாகவே மக்கள் தங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டார்கள்
அத்துடன் வடதாரனை பழுதடைந்து நீண்ட நாட்களாக காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. குமுதினி பழுதடைந்து நெடுந்தீவில் தரித்து நிற்கின்றது. நெடுந்தாரைகை அழகாக மாவிலித்துறைமுகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
Related posts:
|
|