நெடுந்தீவில் தொடரும் அவலம்: மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது தெரிவு !

Wednesday, September 26th, 2018

நெடுந்தீவு பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு இன்றையதினமும் சபையில் கோரம் இன்மையால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபையின் உபதவிசாளர் காலமானதை அடுத்து அந்த இடத்திற்கு மற்றொருவரை நியமிப்பது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் இன்றையதினம் சபை கூடியது.

இதன்போது நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தொடர்பிலும் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் மக்களுக்கு பெரும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக மக்களின் நலன்களை முன்னிறுத்தி சபையின் தவிசாளரை மாற்றம் செய்யவேண்டும். தவிசாளரது தன்னிச்சையான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு ஆகியன சபையின் செயற்பாடுகளை புறக்கணித்து வெளியேறின.

இந்நிலையில் குறித்த தெரிவு சபையின் கோரம் இன்மை காரணமாக நடைபெறாது போனமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நெடுந்தீவு உபதவிசாளர் தெரிவு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெரும் இழுபறிக்குள் இருந்துவருகின்றயால் அங்க ஒரு இயல்பான சபை நடவடிக்கைகள் காணப்படவில்லை என்றும் சபை உறுப்பினர்களுக்க கூட கொடப்பனவுகள் வழங்கப்பட வில்லை என்றும் நிதி குழு உள்ளிட்ட முக்கிய குழுக்கள் நியமிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: