நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

எமது பிரதேசத்தை ஆட்டிப்படைக்கின்ற நுண்கடன் நிதி நிறுவனங்களின் மூலம் அப்பாவி மக்கள் படுகின்ற அவலங்களை உணர்ந்து அந்த நுண் நிதி நிறுவனங்களின் வலையில் மக்கள் ஈர்க்கப்பட்டுச் செல்வதை தடுத்த நிறுத்துவதற்கான விளிப்புணர்வுகளை நாம் மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
பளை இத்தாவில் கென்னடி விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களையும் காலணித் தொகுதிகளையும் வழங்கி வைத்து வீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
நுண்கடன் நிதி நிறுவனங்களின் மூலம் வறிய மக்கள் படும் பாடுகளை இளைஞர்களாகிய நீங்கள் உணர்ந்தவர்களாக செயற்பட வேண்டும். அதுமட்டுமல்லாது இது தொடர்பிலான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்குபவர்களாக மாற வேண்டும்.
அந்தவகையில் நுண் நிதிக்கடன் சுமையிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தான் இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள சவாலாக இருக்கின்றது. எனவே இந்த நுண் நிதிக்கடன் பெறுவது தொடர்பில் சரியான விழிப்புணர்வோடு செயற்படுவது அவசியமாகும். குறிப்பாக இவ்வாறான சவால்களுக்கு இளைஞர்கள் முகம் கொடுக்கும் போது அவர்கள் தமது எதிர்காலத்தை சிதைக்கின்ற வாய்ப்புக்கள் அதிமாகவே காணப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் நீங்கள் விழிப்புணர்வோடு செயற்படுவது மட்டுமல்லாது விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களாகவும் மாற வேண்டும் எனவும் தவநாதன் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டிலும் நடப்பண்டிலும் தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மாகாண சபை ஒதுக்கீட்டிலிருந்து பல விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பளை பிரதேச அமைப்பாளர் பொன்.கார்த்தி உட்பட விளையாட்டு வீரர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|