பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு 

Saturday, June 10th, 2017

பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பற்றீசியா ஸ்கொட்லாண்டுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது பொதுநலவாய ஒன்றியத்தின் சட்ட ஆலோசகர் றோஸ்மேரி கடோகன் (Rosemarie Cadogan) மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதிச் செயலாளர் டியோடற் மகாராஜா (Deodat Maharaj)ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது பொதுநலவாய ஒன்றியத்தின் நாடுகள் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

Related posts: