நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை – முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்!

Thursday, February 16th, 2017

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலங்களை விடுவிக்க, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம்  தெரிவித்தார்.

ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கொழும்பில், இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக, மீள் குடியயேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், அலைபேசியூடாக தெரிவித்ததாக, மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமது காணிகளுக்கு செல்லும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்தனர். தனக்கு உத்தியோகபூர்வமாக கிடைத்த தகவலை தான் தெரிவித்து விட்டதாக கூறிய மாவட்டச் செயலாளர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG_2965

Related posts: