நிதி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Tuesday, August 17th, 2021

நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கட்ட நிதிச்சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு ஏற்புடையன அல்ல என உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது, வெளியிடப்பட்ட சபாநாயகர் அறிவிப்பில், குறித்த விடயத்தை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

குறித்த சரத்துகள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படுமாயின், மூன்றிலிரண்டுக்கும் குறைந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அறியப்படுத்தியுள்ளது.

Related posts: