நாளை வற் வரி சட்டமூலம் தொடர்பில் விவாதம்!

Tuesday, October 25th, 2016

பெறு­மதி சேர் வரி தொடர்­பான சட்­ட­மூலம் திருத்தம் செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்­பட்­டுள்­ளது. அந்த­வ­கையில்   நாளை  விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் பெறு­மதி சேர் திருத்தச்சட்டமூ­லத்­திற்கு எதி­ராக  நான்கு மனுக்கள்    உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

எனினும் இது­கு­றித்­தான தீர்ப்பு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் ‍ஒன்­றி­ணைந்த எதி­ரணி மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் எதிர்ப்­புக்கு மத்­தியில் பெறு­மதி சேர் திருத்­தச்­சட்­ட­மூலம் நாளை விவா­தத்­திற்கு எடுத்துக்கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

பெறுமதி சேர் வரி (வற்வரி) விதிப்பானது கடந்த மே மாதம்  2 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.   எனினும் ஒன்றிணைந்த எதிரணி  நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக தற்காலிகமாக  வரி விதிப்பினை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்படியே தற்போது திருத்தப்பட்ட சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

VAT-4

Related posts: