நாளை முதல் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஆரம்பம்!

நாளை 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் அரசாங்கத்தினால் பிரகடணப்படுத்தவுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பும் மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இந்த வார காலப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் நோக்கம் இனங்களுக்கிடையில் ஐக்கியம் சமாதானம் சகோதரத்துவம் முதலானவற்றை மேம்படுத்துவதே ஆகும்.
இதனூடாக பல்வேறு இனத்தவர்கள் மத்தியில் நம்பிக்கை புரிந்துணர்வு உறுதிசெய்யப்படும்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தின் கீழான முதலாவது நிகழ்வாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கவாரத்தினை பிரகடனப்படுத்துவதே ஆகும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக பாடசாலைகட்டமைபிலிருந்து பாராளுமன்றம் வரையிலான அனைத்து அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கவாரம் முன்னெடுக்கப்படும்.
இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு றோயல் கல்லூரி விவேகானந்தா கல்லூரி பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி; நாளந்தா கல்ல}ரி விசாகல்லூரி ஆகிய பாடசாலைகளை அடிப்படையகாக்கொண்டும் ஹாட்லி கல்லூரி வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி ஆகியவற்றின் மூலம் யாழ்ப்பாணத்hதிற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
Related posts:
|
|