நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
Tuesday, August 17th, 2021அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்தது.
அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
குறிப்பாக நாமல் ராஜபக்ஷவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரம் தடைப்படும்
இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கையையும் பாதிக்கும் - இந்தியாவுக்கான இலங்கை உ...
|
|