நாட்டில் தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021

நாட்டில் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படும் ஊடக அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அத்துடன் தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கையிருப்பில் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு பிரிவினரால் தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது என அரசாங்கம் மறுத்துள்ளது.

இதேநேரம் நாட்டில் செயற்கையாக உணவுப் பற்றாக்குறையை உருவாக்க மோசடி வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரிசி மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றிய அறிக்கைகளுக்குப் பின்னர் பல உணவுப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டை விதிக்கப் போவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


காணமற்போனோர் விவகாரத்துக்கு அரசின் காத்திரமான நடவடிக்கைக்கு கனடாவின் அழுத்தம் அவசியம் - யாழ். ஆயர் !
புதுக்குடியிருப்புக்கு கடமைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியாகப் பேருந்து வேண்டும்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு - செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வளிம...