நாட்டில் டயர்களுக்கு தட்டுப்பாடு – இறக்குமதி தடையே காரணம் என தகவல்!

Friday, August 21st, 2020

இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக நாட்டில் டயர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்களின் உரிமையாளர்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் டயர் தேவைகளில் கணிசமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

இலங்கையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில வாகன வகைகளுடன் பொருந்தக்கூடிய டயர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை. இந்நிலையில், டயர்கள் இறக்குமதி செய்வதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: