நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள் – வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை!

Tuesday, November 16th, 2021

நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை வழங்கும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த ஆதரவு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  

பல்வேறு துறைகளில் பல நெருக்கடிகள் இருந்தபோதும் அரசாங்கம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: