நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவிப்பு!

Saturday, May 14th, 2022

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்;ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது நடக்காது என பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களிற்கு துன்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் பிபிசிக்கு வழங்கியுள்ள முதலாவது பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் மக்களிற்கு மூன்று நேரம் உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகநாடுகள் இலங்கைக்கு மேலும் நிதியுதவியை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்கி;ரமசிங்க பட்டினி நிலை- நெருக்கடி உருவாகாது நாங்கள் உணவுகளை கண்டுபிடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை முறிந்தது என வர்ணித்துள்ள பிரதமர் பொறுமையாயிருங்கள் நான் முன்னைய நிலையை மீண்டும் ஏற்படுத்துவேன் என்பதே இலங்கை மக்களிற்கான தனது செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர் ஆனால் அது நடக்காது என தெரிவித்துள்ளதுடன் குற்றம்சாட்டுவது நடவடிக்கைகளிற்கு வழிவகுக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: