வடக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Sunday, November 22nd, 2020

இலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீ (489 கடல் மைல்) தொலைவில் தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதனால் வடக்கு – கிழக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வடக்கு, வடமேற்கு திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தாழமுக்கமானது நாளை (23) கிழக்கு கடற்கரைக்கு அண்மித்து நகர்ந்து 25,26 ஆம் திகதிகிளில் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்தும் காணப்படும்.

இதனால் நாளையிலிருந்து (23) பரவலாக கிழக்கு மற்றும் வட பகுதிகளுக்கு மழை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

எனினும் கிழக்கு மாகாணத்திற்கு 23,24 ஆம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும். வடக்கு மாகாணத்தில் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும்.

இன்றுமுதல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும்.

தற்போதைய நிலையில் தாழமுக்கமாக காணப்படும் இந்த நிலைக்கு மறைவெப்ப சக்தி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் இது சில சமயம் புயலாகக் கூட மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதனூடாக பாதகமான விளைவுகளை இழிவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: