நுகேகொடை – மஹரகம இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்!
Saturday, August 20th, 2016
நுகேகொட – மஹரகம இடையிலான புகையிரத சேவை இன்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகேகொடை – மஹரகம இடையில் கட்டிய சந்தியிலுள்ள புகையிரத கடவையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார். இதற்கமைய இன்றிரவு 8 மணிமுதல் 22 ஆம் திகதி காலை 6 மணி வரை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
அதிகாலையில் நால்வர் சுட்டுக்கொலை - பாடசாலை மாணவன் காயம்!
கல்வி நிர்வாகசேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி!
ஜனாதிபதித் தேர்தல் - தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!
|
|
|


