நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

Monday, January 2nd, 2023

இந்த வருடத்தில் பணவீக்கத்தையும் வட்டி வீதங்களையும் முகாமை செய்து நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர், ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள், இந்த வருடம் ஓரளவு தணிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: