பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களுக்கு 20 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் – மாகாண சுகாதார அமைச்சு !

Friday, December 21st, 2018

வடக்கு மாகாணத்தில் மருத்துவ வெற்றிடங்களில் பல் அறுவைச் சிகிச்சை நிபுணர் வெற்றிடங்களே நீண்டகாலம் நிரப்பப்படாமல் உள்ளன. பல் மருத்துவத்துறைக்கு விண்ணப்பிப்பவர்களும் குறைவாகவே உள்ளனர் என்று மாகாண சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் நீண்டகாலம் மருத்துவர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட 882 ஆளணியில் 200 க்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் வருடாந்தம் மருத்துவர்களின் வெற்றிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டாலும் பல் மருத்துவர்கள் குறிப்பாக பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன.

பல் மருத்துவ கற்றை நெறிகளுக்கு மாணவர்களின் நாட்டம் குறைவாகவே உள்ளது. அதிலும் தமிழ் மாணவர்கள் நாட்டம் மிகக் குறைவாக உள்ளது. வடக்கு மாகாணத்தில் சுமார் 60 க்கும் அதிகமான பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தேவையாக உள்ளனர். பல் சிகிச்சை மேற்கொள்ள பல் சார்ந்த மருத்துவம் சிறப்பாகக் கற்றிருப்பது அவசியம். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மாத்திரம் 20 க்கும் அதிகமான பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தேவையாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: