நாடு முழுவதும் மின்சாரம் தடைவர வாய்ப்பு!

Tuesday, May 22nd, 2018

நாட்டில் தற்போதுநிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்றும் தமது பணிப்புறக்கணிப்பு 10நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் இன்னமும் உரிய பதில் வழங்கவில்லை எனவும் மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடுதெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் அமைதியாக இருந்தால் பணி பகிஷ்கரிப்பும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: