நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, March 21st, 2021

பங்களாதேஷ்க்கு இரண்டு நாள் உத்தியேகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நாடு திரும்பியுள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று கடந்த 19 ஆம் திகதி இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பங்களாதேஷக்கு பிரதமர் மேற்கொண்டிருந்தார்.

பங்களாதேஷின் சுதந்திர தினம் மற்றும் பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தினம் ஆகிய நிகழ்வில் பிரதமர் பங்கேற்றார்.

இதேவேளை பிரதரின் குறித்த விஜயத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீட்டு நடவடிக்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றம், விவசாயம் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும்,இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் கொரோனா தொற்று நெருக்கடிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: