நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பதிலளிக்க தடுமாறிய அமைச்சர் சுவாமிநாதன்! 

Saturday, June 11th, 2016
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையே சுவாரஷ்யமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் 2 என்ற பிரிவின் கீழ்  டக்ளஸ்  தேவானந்தா அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் ரி.எம். சுவாமிநாதனிடம் பல கேள்விகளைத் முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் சுவாமிநாதன் நீங்கள் இப்போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு 2 வாரகால அவகாசம் வேண்டும். எனினும் நீங்கள் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு பதில் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

சரி அப்படியானால் அதனைக் கூறுங்கள் என டக்ளஸ் தேவானந்தா கேட்டார்.  எந்த திகதிகளில் கேள்விகளை கேட்டீர்கள் எனச் சொன்னால் அதற்கான பதிலை வழங்குகின்றேன் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

அதற்கு சரி எனக்  கூறிய டக்ளஸ் தேவானந்தா நான்கு  திகதிகளை குறிப்பிட்டு அந்தக் கேள்வியையும் அமைச்சருக்கு நினைவுப்படுத்தினார்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட திகதிகளுக்கான பதில்கள் என்னிடம் இல்லை வேறு தினங்களில் கேட்ட கேள்விகளுக்குத் தான் பதில்கள் இருக்கின்றதென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

அதற்கு நான் இங்கு நிறையக் கேள்விகளை கேட்டிருக்கின்றேன். பதில்கள் சிலவற்றுக்குத் தான் கிடைத்துள்ளன. பரவாயில்லை  உங்களிடம் உள்ள பதில்களை கூறுங்கள்  என்றார் டக்ளஸ் தேவானந்தா

அதற்கு எந்தக் கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்க்கின்றீர்கள் என அமைச்சர் சுவாமிநாதன் கேட்டார்.  நீங்கள்  எந்தக் கேள்விக்கு பதில் வழங்க விரும்புகின்றீர்கள் என டக்ளஸ் திருப்பி கேட்டார்.

நீங்கள் விரும்பும் கேள்விக்கு பதில் தருகின்றேன் என்றார் அமைச்சர். பரவாயில்லை நீங்கள் விரும்பும் பதிலை தாருங்கள் என்றார் டக்ளஸ் தேவானந்தா. இல்லை இல்லை நீங்களே கூறுங்கள் என்றார் அமைச்சர்.

அதற்கு நீங்கள் விரும்பும் பதிலை கூறுங்கள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் கூறுங்கள் அதுவும் முடியாது விட்டால் சபாபீடத்தில் வையுங்கள் பரவாயில்லை என்றார் டக்ளஸ் தேவானந்தா.

சரி அப்படியானால் நான் சபா பீடத்தில் வைக்கின்றேன் என்று அமைச்சர் கூற அதற்கு டக்ளஸ் தேவானந்தா நன்றி  என தெரிவித்திருந்தார்.

Related posts:


அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது - புதிய சுகாதார நடைமுறைக்கு ...
பொது நிதியை சிக்கனமாகவும், வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் - அனைத்து...
சுவிஸ் தூதரக ஊழியர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அனுமதி!