இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்!
Thursday, June 6th, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இவர் கடந்த 30ஆம் திகதி இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முதற் தடவையாக மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்கிறார். அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 5 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணியில்!
கடல் உயிரினங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான பிராந்திய மாநாடு இன்று!
திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா - ஐந்து பாடசாலைகள் பூட்டு!
|
|
|


