நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

Monday, August 8th, 2022

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விசேட குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் முறைமைக்கான திருத்தங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: