இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை!
Tuesday, July 3rd, 2018
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றி ஆராயும் நோக்கில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அசோக் ராவோ அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் செய்து தலைமன்னார் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது.
இறுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
Related posts:
உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு!
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - நாடாளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும...
மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை - சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அம...
|
|
|


