நவம்பர் முதல் தொலைபேசி அழைப்புகளுக்கு விசேட வரிகள்?

Saturday, October 29th, 2016

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றினால் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும் என அரச நிதி கொள்கை வகுப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொலைபேசி அழைப்புக்களுக்கு மேற்படி இரு வரிகளுக்கும் புறம்பாக மேலும் இருவகையான வரிகள் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் முதலாம் திகதியின் பின்னர், தொலைபேசிக் கட்டணமாக 150 ரூபா செலுத்தும் ஒருவர், 100 ரூபாவின் சேவையையே பெற்றுக் கொள்ள முடியும். ஏனைய 50 ரூபாவை மேலதிகமாக வரியாக செலுத்த வேண்டும் எனவும் குறித்த அதிகாரி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

vat-phone

Related posts: