நல்லூர் ஆலய பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்!

Sunday, August 14th, 2016

நல்லூர் ஆலய உற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உணவு  பழுதடைந்தமையின் காரணமாக இரு பொலிஸார் மயக்கமுற்றுள்ளனர்.

குறித்த சம்பவம்  நேற்று (13) மதியம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸாரே இவ்வாறு மயக்கமடைந்தனர்.

இவர்களிற்கு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்ததாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கோயில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு மதிய உணவாக பணிஸ் மாத்திரம் வழங்கப்பட்டடள்ளது. இதை பலரும்விமர்சித்திருந்த நிலையில் நல்லூர் கோயில் வளாக பாதுகாப்பிற்காக சுமார் 720 க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: