நடுத்தர ஆடைத் தொழில்துறை அபிவிருத்திக்கு அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ புதிய முயற்சி!

Thursday, March 24th, 2022

நாடு முழுவதும் உள்ள 50 தையல் இயந்திரங்கள் அல்லது 50 ஆட்களுக்கும் குறைவாக கொண்ட சிறிய ஆடைத் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் ஆடை துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்காகவும், அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றத்வதற்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் நோக்கம்  ,இறுதியில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க கூடிய அளவு மாபெரும் ஏற்றுமதியாளர்களாக மேம்படுத்துவதே என அவர் மேலும் கூறியிருந்தார். ‘இது ஒரு புதிய முயற்சியாகும், இதனை ஏனைய தொழிற்துறைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளோம்’எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  கூறியுள்ளார்.

யுனிலிவர் ஸ்ரீலங்கா, அதன் பிரதான வர்த்தக நாமமான ‘சன்லைட்’ கீழ், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உதவுவதற்காக, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் சிங்கர் பேஷன் அகடமியுடன்’ ஒரு சந்திப்பை ஏற்படுத்திய போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 ‘Manudam Viyamana’ கருத்திட்டத்தின் மூலம் ஆடைத் துறையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்க யுனிலிவர் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவை முதலிட தீர்மானித்துள்ளது.

தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார சவால்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்க  இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என யுனிலிவர் நிறுவனம் மேலும் தெரிவித்திருந்தது.

’10, 000 முயற்சியாளர்களை இலக்காக கொண்ட இலவச நிகழ்நிலை செயலமர்வுகளை  முன்னெடுக்கவுள்ளோம்’என பேஷன் அகடமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: