தோழர் நந்தன் அவர்களின் தாயார் காலமானர்.

Thursday, October 10th, 2019


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர ஒருங்கிணைப்பாளர் பிறைசூடி நந்தன் அவர்களின் தாயார் பிறைசூடி ஜெயதேவி காலமானார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

வயது முதிர்வு காரணமாக சிறிது காலம் உடல்நலக் குறைவுற்றிருந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தனது 85 ஆவது வயதில் நேற்றையதினம் (09) காலமானார்.

388/8 கோயில் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது மகளின் இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளையதினம் காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை  11 மணியிலிருந்து பிற்பகல் 01 மணிவரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்தச் செல்லப்படும்.

Related posts: