தேசிய மாணவர் காப்புறுதி தினம் நாடெங்கும் அனுஷ்டிப்பு!

Thursday, December 7th, 2017

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்காகவும் பாதுகாப்புக் காப்புறுதித் திட்டம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இன்று 7 ஆம் திகதி நாடெங்கும் மாணவர் பாதுகாப்பு காப்புறுதி தினம் கொண்டாடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசத்தின் பிள்ளைகளை எப்போதும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாணவர் பாதுகாப்பு காப்புறுதி தினத்தில் நாடெங்குமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவ சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி பற்றிய பல்வேறு அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

மாணவர் பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய அறிவுறுத்தலிலும் வழிகாட்டலிலும் பாதுகாப்பு காப்புறுதி தினத்தில் நாடெங்குமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவ சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி பற்றிய பல்வேறு அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்படவுள்ளன. மாணவர் பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய அறிவுறுத்தலிலும் வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்குமான காப்புறுதித்திட்டமாகும்.

இவ்வாறு நாடெங்குமுள்ள 11,242 பாடசாலைகளைச் சேர்ந்த 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இலவச பாதுகாப்பு காப்புறுதியைப் பெறுவார்கள். இதற்கேற்ப மாணவர்களின் நோய்களுக்கான வெளிச்சிகிச்சைகளுக்காக 10 ஆயிரம் ரூபாவும் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்காக ஒரு இலட்சம் ரூபா வரையும் மாணவர்களின் திடீர் மரணத்தின் போது 1 இலட்சம் ரூபாவும் பெற்றோரின் மரணத்தின் போது 75 ஆயிரம் ரூபாவும் பாதுகாப்பு காப்புறுதியாக வழங்கப்படும்.

Related posts: