தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னரே தீர்மானிக்கப்படும் – பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு!

Saturday, August 15th, 2020

நாடாளுதேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்குவதா? இல்லையா? என்பதை, அவர்களது பாதுகாப்பு தொடர்பான மதிப்பாய்வுகளை மேற்கொண்டதன் பின்னரே தீர்மானிப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தேசிய பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த 81 பேரின் பாதுகாப்பு அதிகாரிகளை அடுத்தவாரம்முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், பாதுகாப்பை அவ்வாறாக உடனடியாக நீக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 4 பாதுகாப்பு அதிகாரிகளும், அமைச்சர் ஒருவருக்கு பிரதான காவல்துறை பரிசோதகர் உட்பட 8 அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: