பாடசாலை நேரத்திற்கு மேலதிகமான ஆசிரியர்களை வேலை வாங்கும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை என்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Wednesday, January 4th, 2017

பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களை பயமுறுத்தி அதிபர்கள் வேலை வாங்க முடியாதெனவும் அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக தொழிற்சங்க செயற்பாட்டை மேற்கொள்வோமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,

நாடு பூராகவும் பாடசாலைக் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 1.30மணிவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடமாகாணத்திலுள்ள குறிப்பிட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களைப் பயமுறுத்தி வலுகட்டாயமாக பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஓரிரு மணித்தியாலங்கள் வேலை வாங்குவதற்கும் முற்படுகின்றனர். அதாவது சில அரச பாடசாலைகளும் குறிப்பான அரச உதவியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள் ஒரு சிலவும் ஆசிரியர்களை பயமுறுத்தி மேலதிகமாக ஓரிரு மணித்தியாலங்கள் வைத்து வேலை வாங்க முற்படுவதாக அறியக் கிடைத்துள்ளது இவ்வாறு ஆசிரியர்களை பயமுறுத்தி வேலை வாங்க முற்படுபவர்களுக்கு எதிராக எமது சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

ceylonteachersunion

Related posts: