தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையமுடியும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, September 28th, 2020

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை நாம் எதிர்பார்க்க முடியும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீமெந்து மற்றும் இரும்பின் விலைகளைக் குறைப்பதற்குள்ள இயலுமை தொடர்பாக கண்டறிவதன் மூலம் நிர்மாணத் துறையின் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இளைஞர் சமுதாயம் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்களைத் திட்டமிடுவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பயன்பாட்டின் மூலமும் உரிய தெளிவுபடுத்தல்கள் மூலமும் உள்நாட்டு வர்த்தகர்களை இலகுவாகப் பங்குச் சந்தையை நோக்கி வரச்செய்ய முடியும் என்பதனையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் இருந்த அபிவிருத்திச் சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், தென்னந் தோட்டங்களை துண்டாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாரிய அளவிலான 289 திட்டங்கள் நாட்டில் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவை உடனடியாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ  பாதைகள், நீர் வழங்கல் திட்டங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட – திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைகளைத் தாமதிக்காது நிறைவு செய்வதன் மூலம் நிர்மாணத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: