ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் அரச தொலைக்காட்சி: வெளியானது வர்த்தமானி!

Tuesday, September 10th, 2019


இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஒன்று உருவாகியதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இனோகா சத்தியலிங்கம் செயற்பட்டு வருகின்ற நிலையில் புதிய தலைவர் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இனோக்கா சத்தியலிங்கம் அந்த பதிவியில் இருந்து நீங்க முடியாதென கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதியின், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியாக்கப்பட்டது.

இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ருவான் விஜயவர்தன வகிக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இருந்தது. தற்போது அது ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நேரடியாக கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: