தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் சென்றுவிடும் – நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் வலியுறுத்து!

Monday, December 20th, 2021

தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் நிச்சயமாக குடும்பம் சிதைவடைந்துவிடும் என்பதற்கு மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் எமது சமுகத்தையும் எமது பிரதேசத்தையும் நிச்சயம் முன்னேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்’ளார்.

வாழைச்சேனை – பேத்தாளை பொது நூலகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இதன்போது அவர் மேலும்  உரையாற்றுகையில் –

நான் அரசியல் ரீதியாக மாற்றப்பட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று தூண்டப்பட்ட போது எனக்கு உலகத்தை பார்ப்பதற்கு நிச்சயமாக புத்தகங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அந்த சந்தர்ப்பத்தில்தான் வாசிப்பின் மூலம் உலகத்தை அறிந்து கொண்டேன்.

அதுமட்டுமல்லாது 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டுவரை அதிகமான புத்தகங்களை மிகவும் கஸ்டப்பட்டு படிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதன் தாக்கம்தான் இந்த நூல் நிலையம் உருவாக காரணமாக அமைந்தது.

நான் மிக சிறந்த நூல்களை வாசித்துள்ளேன். நண்பர் ஒருவர் நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களை படியுங்கள். வாசிப்பு ஒரு மனிதனனை நிச்சயம் சிறந்த ஒர் பிரஜையாக மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

மாறாக எமது பக்கத்து வீட்டுப்பிள்ளைக்கு வெளிநாட்டில் இருப்பவர் போன் ஒன்றை அன்பளிப்பு செய்தால் நமது பிள்ளைக்கும் கடன்பட்டு போன் வாக்கிக்கொடுக்க வேண்டும் என்று எண்னுகின்ற பெற்றோர்கள் இப்போது அதிகரித்து காணப்படுகின்றனர்

இந்த நிலை எம்மில் இருந்து மாற வேண்டும். பிள்ளைக்கு போன் தேவை எப்போது என்றால் ஆசிரியர் சொல்கின்ற நேரத்தில் சூம் கிளாசுக்கு செல்வதற்கு தேவை அதனை வைத்துக் கொண்டு பிள்ளையும் தாய் மற்றும் தகப்பன் அனைவரும் எந்த நேரமும் போனை வைத்துக் கொண்டு இருந்தால் அதன் விளைவு நிச்சயமாக நன்றாக அமையாது குடும்பம் சீரழியும்.

அந்தவகையில் தெடர்பாடல் தொழில்நுட்பம் கட்டாயம் தேவை தொழில் நுட்பத்தை நாங்கள் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் நிச்சயமாக குடும்பம் சிதைவடைந்து விடும் எனவே நாம் ஒவ்வொருவரும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் எமது சமுகத்தையும் எமது பிரதேசத்தையும் நிச்சயம் முன்னேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: