தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு!
Thursday, January 25th, 2018
இலங்கை தொழில் திணைக்களத்தில் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலுள்ள அங்கத்தவர்களின் பணத்தை மீளப்பெறுவதற்கான பணிகள் தற்போது வழமைபோல் நடைபெற்று வருகின்றன.
ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களின் அங்கத்தவர்களின் பணத்தை மீள பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணி மற்றும் இதர நடவடிக்கைகளும் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று காலை தடைப்பட்டன. இதனால் தூர இடங்களிலிருந்து வந்திருந்த பலர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்நதனர்.
கணனிக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று நடைபெறுவதாக திணைக்களத்தின் ஊடக பணிப்பாளர் தம்மிக்க எமது செய்திப்பிரிவிற்கு இன்று காலை தெரிவித்தார்.
Related posts:
காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் நாடுகள் குறித்து அவதானிக்க தீர்மானம்!
அடையாள அட்டைகள் பெறுவதற்கு கட்டணம் அறவீடு!
யாழ். போதனாவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
|
|