தொழிற்சங்க நடவடிக்கையால் சுங்கத் திணைக்களத்திற்கு பாரிய நட்டம்!

Saturday, February 2nd, 2019

இலங்கை சுங்கப் பணியாளர்கள் முன்னெடுத்துவரும்  தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம் 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத் தலைவர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கப் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 4 ஆவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்க திணைக்களத்திற்கு சுமார் 3 பில்லியன் ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக கடமையாற்றிய, பீ.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்த நடவடிக்கைக்கு சுங்கத் திணைக்கள பணியாளர்கள் கடந்த 29 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: