தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் கேபிள் இணைப்பு வயர்களை அகற்றியது!

Sunday, June 17th, 2018

இலங்கை மின்சார சபையைத் தொடர்ந்து சேவை நிலையமும் உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்களை அறுக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த இரு நாள்களாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதைக் காண முடிந்தது.

யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போதுசுமார் 250 கேபிள் உரிமையாளர்கள் மாவட்டம் முழுமையாக தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் பருத்தித்துறையில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தையடுத்து இ.மி.சபை நீதிமன்ற அனுமதியுடன் உள்ளுர் தொலைக்காட்சி கேபிள் இணைப்புக்களை அதிரடியாக அகற்றியது. இதனால் குடாநாட்டின் சேவைகள் முழுமையாகத் தடைப்பட்ட நிலையில் தற்காலிக இணக்கத்தில் சேவைகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் கடந்த வாரம் தொலைத்தொடர்பு சேவை நிலையமும் தனது கம்பங்களின் ஊடாகச் செல்லும் உள்ளுர் கேபிள்கள் அகற்றப்பட வேண்டும் என பத்திரிகை அறிவித்தல் விடுத்த நிலையில் தமது தூண்களில் இருந்த கேபிள்களை அகற்றியது.

Related posts: