தொடர்ந்தும் இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும்!

Tuesday, October 3rd, 2017

ஜப்பான் மேயுபூசியின் நகரமுதல்வர் றியூ ஜமாமோற்றோ (RYUYAMAMOTO) மற்றும் அவரது பாரியாரான மியே ஜமாமோற்றோ (MIE YAMAMOTO) ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்..

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த சந்திப்பின்போது நிதி உதவியை றியூ ஜமாமோற்றோ மற்றும் அவரது பாரியார் வழங்கினர்.இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தீயணைக்கும் வாகனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்தும் இலங்கைக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

Related posts: